25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா - PM- SYM  . 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா - PM- SYM  . 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திட்டம்.

 நிதி ரீதியான  ஆதரவு வயதான காலத்தில் அனைவருக்கும் தேவைப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு மாதா மாதம் ஒரு நிலையான வருமானம் இருந்தால், அவர்களுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதற்கு வழிவகை செய்யும் வகையில் மத்திய அரசு பல வித ஓய்வூதியத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அதில் ஒரு முக்கியமான மற்றும் பிரபலமான திட்டம்தான் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டம்.

அதாவது 60 வயதிற்கு பிறகு வழக்கமாக ஏற்படும் சார்பு நிலையை தவிர்க்க இது உதவுகிறது இந்தத் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கானது. தெரு வியாபாரிகள், ஓட்டுநர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பீடிதொழிலாளர்கள் மற்றும் விவசாயத்தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுவரை, நாடு முழுவதும் 46,29,664 க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PM-SYM) திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் ரூ. 15,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள், இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.தொழிலாளர்கள் தங்களது வயதுக்கு ஏற்ப மாதாந்திர பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

தொழிலாளி பங்களிக்கும் அதே அளவிலான தொகையை அரசாங்கமும் கணக்கில் டெபாசிட் செய்யும். PM SYM திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஒருவர் எவ்வளவு சீக்கிரம்இதில் சேருகிறாரோ, அவ்வளவு அதிகமானநன்மைகள் கிடைக்கும். 18 வயது நிரம்பிய ஒருவர் இதில் சேர்ந்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.55-

மட்டுமே செலுத்த வேண்டும், அதே சமயம் 40 வயது நிரம்பியவருக்கு, மாதாந்திர பங்களிப்பு ரூ.200 ஆக இருக்கும். மாதாந்திர பங்களிப்புபயனாளியின் வயதைப் பொறுத்தது. இதன் வரம்புரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும். இந்தத் திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.

இந்தத் தொகையை 60 வயது வரை டெபாசிட் செய்ய வேண்டும்.இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், அருகிலுள்ள csc அல்லது ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் சேர, ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு மட்டுமே தேவை. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ் திறக்கப்பட்ட அனைத்துவங்கிக் கணக்குகளும் இந்தத் திட்டத்திற்கு செல்லுபடியாகும். உங்கள் கணக்குடன் IFSC தகவலை வழங்கினால் போதும். செயல்முறை முடிந்ததும், நீங்கள் சி.எஸ்.சி-யிலிருந்தே ஷ்ரம் யோகி ஓய்வூதியக் கணக்கு எண் மற்றும் ஷ்ரம் யோகி அட்டையைப் பெறுவீர்கள்.

பயனாளி இறந்தால், அவரது வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியத் தொகையில் 50% குடும்ப ஓய்வூதியமாகப் கிடைக்கும். பயனாளி 10 ஆண்டுகளுக்குள் திட்டத்திலிருந்து வெளியேறினால், அவரது பங்களிப்பு சேமிப்பு, வங்கி வட்டி விகிதத்துடன் திரும்பப் பெறப்படும்.

திட்டத்தில் சேர்ந்த பிறகு, பயனாளிக்கு ஒரு ஷரம் யோகி அட்டை வழங்கப்படுகிறது.இந்தத் திட்டம் எல். ஐ. சி மற்றும் சி. எஸ். சி மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News