25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பொருட்டு முகாம்கள் நடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பொருட்டு முகாம்கள் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்றுத்திறனாளிகளின் நலன் வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.அதன்படி, விருதுநகர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஒவ்வொருவாரம் புதன்கிழமையும், அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையும், திருவில்லிபுத்தூர், அரசுமருத்துவமனையில் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமையும், இராஜபாளையம், அரசுமருத்துவமனையில் மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமையும், சிவகாசி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையும் முகாம்கள் நடைபெறும்.

மேற்காணும் முகாம்கள் நடைபெறும் நாட்களில்  மாற்றுத்திறனாளிகளின் வகைகளான கை,கால் இயக்கக் குறைபாடு,  தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், மூளை முடக்குவாத பாதிப்பு, குள்ளத் தன்மை, தசைசிதைவு நோய்,  அமிலவீச்சினால் பாதிக்கப்பட்டோர், கண் பார்வையின்மை, குறைந்த பார்வையின்மை, காதுகேளாமை, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அரிவாளது இரத்தக்சோகை, இரத்த அழிவுச்சோகை, இரத்த உறையாமை (அல்லது) இரத்த ஒழுகுகுறைபாடு, அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர், மனநோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, பல்வகைகுறைபாடு, நடுக்குவாதம், பல்வகை குறைபாடு உள்ளிட்டவைகளால்
 பாதிக்கப்பட்டமாற்றுத்திறன் உடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (Unique Disability Identity Card) பெறுவதற்கு ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டைநகல் மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ-4, ஆகியவற்றை கொண்டு வந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும் இது தொடர்பாக விபரம் ஏதேனும் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *