25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் நோய்க் கிருமிகளின் பரவல்ஏற்படும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் நோய்க் கிருமிகளின் பரவல்ஏற்படும்.

நீரில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் ஏற்படும் முக்கியப் பிரச்னை நோய்க் கிருமிகளின் பரவல் தான். இவற்றை நீரிலிருந்து நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆபத்தான நுண்ணுயிர்கள் நெகிழிகள் மீது தங்கி, பெருகிப் பரவும். இது சுகாதாரத்திற்கு ஆபத்து. ஆனால், நுண்ணெகிழிகளின் இந்தத் தன்மை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுகள் நீக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீர் பாதுகாப்பாக உள்ளதா என்று கண்காணிப்பது அவசியம். இந்த நீரின் மாதிரிஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதில் ஆபத்தான கிருமிகள் உள்ளனவா என்று ஆராயப்படும். 

இதில் உள்ள சிக்கல் என்னவென் றால், இந்த ஆய்வு24 மணி நேரத் திற்கு ஒருமுறை மட்டுமே செய்யப் படும். ஒவ்வொருமணிநேரமும்கண்காணிக்கும்நடைமுறைஇல்லை.ஏனென்றால், கழிவுநீரில் கிருமிகள் இருந்தாலும் அவை பெருகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.கிருமிகள் குறிப்பிட்ட எண்ணிக் கையில் இருந்தால் தான் சோதனை யில் தெரியவரும். எனவே அவை சீக் கிரம் பெருகுவதற்கு வழி செய்தால் அவற்றைக் கண்டறிவது எளிதாகிவிடும். இதை உணர்ந்த ஸ்காட்லாந்து பல்கலை ஆய்வாளர்கள், நுண்ணெகிழிகளை இவற்றுக்குப் பயன்படுத்தினர். 

அதாவது, நுண்ணெகிழிகளாலான2 மி.மீ., அகலம் கொண்ட சிறிய உருண்டைகளை வடிகட்டியில் வைத்து நீரில் இட்டனர்.கிருமிகள் உருண்டைகள் மீது படிந்து வேகமாக வளரத் துவங்கின.  அவற்றை ஆராய்ந்து அவை எந்த வகையைச் சேர்ந் தவை என்று  கண்டறிந்தனர்.எனவே மிகக் குறுகிய காலத்தில் கிருமிகளைக் கண்டறிய இப்படியான நுண்ணெகிழிகளைப் பயன் படுத்த முடியும் என்று ஆய்வுப்  பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News