இன்றைய கால குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது முக்கியமானது..
ஓவ்வொரு வார்த்தைக்கு பின்னும் ஓர் உணர்வு இருக்கிறது. நாம் மற்றவர்களிடம் பேசுகிற வார்த்தைகள் அவர்களை ஆற்றல் படுத்துவதாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும் இருக்கவேண்டும். வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. உயிர் இல்லாவிட்டாலும் உணர்வு மிக்கவையாக இருக்கின்றன. எனவே பிறரிடம் பேசுகிற போது அவர்களை காயப்படுத்தாத வண்ணம் பேச வேண்டும். ஒருவர் தவறு செய்து விட்டாலும் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வழி காட்ட வேண்டும். இந்த வகையில் குழந்தைகளிடம் பேசுகிற போது மிக கவனமாக பேச வேண்டும். அவர்கள் மனது கண்ணாடி போன்றது. ஒரு முறை உடைந்து விட்டால் சேர்ப்பது கடினம். எனவே குழந்தைகளை வளப்படுத்துகிற வாக்கியங்கள்.
இன்றைய கால குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது முக்கியமானது. பல குழந்தைகள் சிறிய தோல்விகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் கடினப்படுகிறார்கள்.அந்த நிலையில் குழந்தைகள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை கொள்ள வைத்திட வேண்டும்.அதற்காக பெற்றோர்கள் குழந்தைகளிடம் 'உன்னையே நீ நம்பு' என்ற வாக்கியத்தை சொல்ல வேண்டும்.
'உன்னால் முடியும்' என்ற வாக்கியத்தை குழந்தைகளிடம் பெற்றோரும் உறவினர்களும் சொல்ல வேண்டும். குழந்தைகள் கலந்து கொள்ளும் போட்டிகளில் இந்த வார்த்தைகளை சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். நம் பெற்றோர் நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொள்வார்கள்.
0
Leave a Reply