வணிகரீதியிலான தையல் இயந்திரத்தை 1850-ம் ஆண்டில் உருவாக்கிய ஐசக் சிங்கர் தையல்மெஷின்க்குகனவில் தீர்வு கிடைத்தது.
வணிகரீதியிலான தையல் இயந்திரத்தை 1850-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஐசக் சிங்கர். அவர் தையல் இயந்திரத்தை உருவாக்கிய போது ஒரு கட்டத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் தீர்க்க முடியாமல் தவித்தார்.
நூல் அறுந்து போகாமலும், சிக்கிக் கொள்ளாமலும், தொடர்ச்சியாக ஊசியால் தைக்கச் செய்வது,? எப்படி என்பது குறித்து குழம்பிப் போய் இருந்தார். எப்போதும் அந்த நினைவாகவே இருந்தார்.
ஒரு நாள் இரவில் தூங்கும் போது காட்டில் வேட்டையாடும் மக்கள் ,தன்னை துரத்துவது போல கனவுகண்டார். அந்த மக்கள் அவரை நெருங்கிய போது அவர்கள் வைத்திருந்த ஈட்டியின் நுனியில் ஒரு துளை இருப்பதை கண்டார். திடுக்கிட்டு கண்விழித்தார்.
முன்பு ஊசியின் பின்பகுதியில் நூலை கோர்ப்பதற்கான முறையைக் கண்டறிந்திருந்தார். இந்தக் கனவுக்குப் பின் ஊசியின் நுனிப்பகுதியில் துளையிட்டு அதன்வழியாக நூலைக் கோர்த்து தைத்துப் பார்த்தார்.
அது வெற்றிகரமாக அமைய சிங்கரின் முயற்சி வெற்றி அடைந்தது. அவரது தையல் இயந்திரங்கள் உலகில் அதிகமாக விற்பனையாகும் தையல் இயந்திரங்கள் என்ற பெருமையை பெற்றன.
0
Leave a Reply