25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் jan 30th
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் jan 30th

கூடைப்பந்து 

பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் 125-67 என சத் தீஷ்கரை வென்றது. தமிழக ஆண்கள் அணி 76-69 என சர்வீசஸ் அணியை வீழ்த்தியது. 

துப்பாக்கி சுடுதல்,  

துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றில் ஹரியானாவின் ரமிதா, 634.9 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். தமிழகத்தின் நர்மதா, மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆண்கள் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் பஞ்சாப் பின் விஜய்வீர் சித்து 587 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.    

கிரிக்கெட் 

சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரி சையில் இந்தியாவின் திலக் வர்மா, 832 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர் -2' இடத்துக்கு முன்னேறினார். 

பவுலர்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி, 679 புள்ளிகளுடன் 25வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (255) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். 

ஹாக்கி 

ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழகம், உ.பி .. அணிகள் மோதின. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்கால் (19 புள்ளி), சூர்மா (19), ஐதராபாத் (18), தமி ழகம் (18) அணிகள் அரையிறுதிக்கு (ஜன.31) முன்னேறின. 

செஸ் 

நெதர்லாந்தில், சர்வ தேச செஸ் தொடரின் 87வது சீசனில் வெள்ளை நிற காய்களுடன் விளை யாடிய குகேஷ், 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் குகேஷ் பெற்ற 4வதுவெற்றி இது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரக்ஞா னந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் தோல்வியடைந்தார். இந்தியா வின் அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதிய போட்டி 'டிரா' ஆனது.ஒன்பது சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ், 6.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News