25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'சாகஸ்' நோய்  உண்டாக்கும்முத்தமிடும் பூச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சாகஸ்' நோய் உண்டாக்கும்முத்தமிடும் பூச்சி.

 முத்தமிடும் பூச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  நாடுகளை நடுங்க வைத்திருக்கிறது. டிரைப்நோசோமா என்ற கிருமி வகையை சேர்ந்த 'சாகஸ்' என்ற ஒரு நோயை  இந்த பூச்சி மனிதனுக்கு உண்டாக்குகிறது.

மனித உடலில் இருக்கும் காயங்களில் இந்த பூச்சி அதன் கழிவுகளை வெளியிடுகிறது.

இந்த கழிவுகளால் ஏற்படும் அரிப்பை நீக்க காயங்களை ஒட்டிய பகுதியில் விரல்களை வைத்து தேய்க்கும் போது, இந்த கிருமி கைகள் வழியாக வாய், கண்கள் மூலம் மனித உடலின் உள்ளே புகுந்து விடுகிறது.

சாகஸ் நோய் பாதித்த ஆரம்ப கட்ட த்தில் சில வாரங்கள் அல்லது மாதங்கள், காய்ச்சல், தலைவலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும், சில நேரங்களில் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். நாள்பட்ட கட்டத்தில் இந்த நோய் இதய செயலிழப்பு, இதய வீக்கம், செரிமான  குழாய்பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால  சிக்கல்களை ஏற்படுத்தும்.

இந்த நோய் அர்ஜென்டினா, பிரேசில்,மெக்சிகோ, கொலம்பியா ஆகிய  நாடுகளில் பரவி ,அமெரிக்காவின் சில மாநிலங்கள், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து  ஆகிய பகுதிகளிலும் பரவி வருகிறது.

அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த  நோய், சத்தமின்றி பல்வேறு நாடு களில் பரவி வருகிறது. காடு அழிப்பு, நகரமயமாக்கல்  போன்ற நோய்களுக்கு முக்கி காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலக நாடுகள் பலவும் இதனை  தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *