25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தண்ணீர் ஒவ்வாமை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தண்ணீர் ஒவ்வாமை

குளியல் என்பது உடலை தூய்மையாக வைத்திருக்க ,அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய, ஒரு பழக்கமாக இருக்கிறது ஆனால், குளியல் என்றாலே சிவருக்கு பயம் ஏற்படும் நிலையும் உள்ளது.ஏனென்றால் உடலில் தண்ணீர் படும்போது தோல் அரிப்பு தாங்க முடியாது. இந்த நிலைக்கு அக்வாஜெனிக்   புரூரிட்டஸ் அல்லது தோல் தினவு என்று பெயர். இது ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான தோல் பாதிப்பு ஆகும்.இந்த பாதிப்பு உள்ளவர்கள் தோலில் தடிப்பு அல்லது நிற மாற்றம் எதுவும் ஏற்படுவது இல்லை. குளித்த உடன் உடலை அரிப்பில் இருந்து மீட்க துணியை கொண்டு நீண்ட நோம் தேய்த்துக்கொண்டே இருக்கும் நிலைமை காணப்படும்.

இந்நோய் காரணம் குறித்து இதுவரை மருத்துவ உலகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை உடலில் தண்ணீர் பட்டதும், நரம்புகள் ஏன் இது போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம்: என்று மட்டும் சொல்லப்படுகிறது.ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.

ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதே போல் மன அழுத்தம், தோல் கசிவு, சில மருந்துகள் காரணமாகவும் அரிப்பு அதிகரிக்கலாம்.சில வேளைகளில், தண்ணீர் தோலின் மேல்புறத்தை தொட் டதும், மாஸ்ட் செல்கள்' எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களின் உள்ள ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருட்கள் வெளியே அரிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிய வந்துள்ளது. இயற்கையின்  பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை. அதில்  இதுவும் ஒன்று என மருத்துவ உலகம் கூறுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News