25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


2026 உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு  தோல்வி - ஈகுவடார் அணி  வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026 உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு தோல்வி - ஈகுவடார் அணி வெற்றி.

மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள புகழ்பெற்ற மெட்லைஃப் (MetLife) மைதானத்தில் நடைபெற்ற 'இ' பிரிவு லீக் போட்டியில், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஜெர்மனி அணி, 23-வது இடத்தில் உள்ள ஈகுவடார் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. போட்டியின் 77-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் நட்சத்திர வீரர் ஜோர்டி பிளாட்டா (Jordy Plata) ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஜெர்மனி போன்ற ஒரு பெரிய அணியை ஈகுவடார் வீழ்த்தியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது!

இதன்பின், ஆட்டத்தை சமன் செய்ய ஜெர்மனி அணியினர் கடைசி நிமிடம் வரை தீவிரமாகப் போராடினர். ஆனால், ஈகுவடார் அணியின் பலமான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், ஆட்டநேர முடிவில் ஈகுவடார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News