. அதிர்ஷ்டக் காற்று: கணக்கு தொடங்கிய 2 மாதத்தில் ₹4.5 கோடிக்கு மேல் வென்ற இந்திய வாலிபர்!
அபுதாபியில் வசித்து வரும் 34 வயதான இந்தியர் ஷாஜீர் வெங்கா, ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி (SIB) நடத்திய 'மில்லியனர் கேம்பைன்' (Millionaire Campaign) குலுக்கலில் ஏஇடி (AED) 2 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 4.5 கோடி ரூபாய்க்கும் மேல்) பரிசுத் தொகையை வென்று மில்லியனராகியுள்ளார்.
அவர் இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், இந்த அதிர்ஷ்டப் பரிசு அவரைத் தேடி வந்துள்ளது. "இந்தத் திட்டத்தைப் பற்றிப் படித்துவிட்டு என்றாவது ஒருநாள் நாமும் வெல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் என் கனவு நிஜமாகும் என எதிர்பார்க்கவில்லை" என்று ஷாஜீர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply