25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


குழந்தை நேய செயலகம், தமிழ் நாடு மற்றும் புதுவை குழந்தை நேய தேர்தல் அறிக்கை 2026 Child Protection Manifesto – 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தை நேய செயலகம், தமிழ் நாடு மற்றும் புதுவை குழந்தை நேய தேர்தல் அறிக்கை 2026 Child Protection Manifesto – 2026

"குழந்தை நேய செயலகம்" என்பது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் பல ஆண்டுகளாக குழந்தைகள் பாதுகாப்பு,
குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள்
மற்றும் குழந்தை பாதுகாப்பு செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும்
சார்ந்ததல்ல. இது முழுமையாக அரசியல் சார்பற்ற, சமூக நலன் நோக்குடைய, "குழந்தை பாதுகாப்பு" என்ற ஒற்றை குரலில்
இணைந்த சமூக செயற்பாட்டு கூட்டமைப்பாகும். குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறை, பாலியல் குற்றங்கள், புறக்கணிப்பு,
சுரண்டல் மற்றும் ஆபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சமூக விழிப்புணர்வு, பயிற்சி, ஆலோசனை மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

"குழந்தை நேய செயலகம்" சார்பாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவைமாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைமைகளுக்கு “குழந்தை நேய தேர்தல் அறிக்கை 2026”கோரிக்கையாக கொடுக்கபட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களை சந்தித்து கோரிக்கைவைக்கபட இருக்கின்றோம்.நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கையில் கீழ்க்காணும்செயல்பாடுகளை உள்ளடக்கி முன்மாதிரியான குழந்தை பாதுகாப்பு மாநிலமாக உறுதிசெய்யவேண்டுகிறோம்.

 

1. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறைஎன்ற பெயரில் குழந்தைகளுக்கென்றே தனிஅமைச்சகம் / தனிதுறை ஏற்படுத்தப்படும்.

2. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறையின் கீழ் ஒழுக்கம் உறுதி செய்யப்பட்ட தரமான கல்வி கிடைக்கஆவண செய்யப்படும்.

3. குழந்தைகளின் பள்ளி பருவத்தில் மதநல்லிணக்க வகுப்பறைகளாக செயல்பட உறுதி செய்யப்படும். இதைவலுப்படுத்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணையபெற்ற குழுக்களுக்கு அங்கீகாரம்வழங்கப்படும்.

4. மாநிலத்தின் தேர்தல் சம்பந்தமாக குழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுத்த எந்த அரசியல்கட்சிக்கும் அனுமதி இல்லை என்ற சட்டவரைவு கொண்டுவரப்படும்.

5. குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை உரிமைகள் மற்றும் நலன் ஆகியவற்றை உறுதி செய்யமாநில அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கப்படும்.

6. மாநிலத்தின் தேர்தல் ஆணையம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான ஒழுங்கு முறைகளை வகுத்துவெளிப்படையான விழிப்புணர்வு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விழிப்புணர்வுதிட்டம்தன்னார்வஅமைப்புகள்மூலம்செயல்படுத்தப்படும்.

7. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை முழுவதும் கட்டுப்படுத்தக்கூடிய விரைவு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும். குழந்தைகள் மீதான வன்முறை குற்றவாளிகளை மக்களின் பார்வைக்கு கொண்டுவந்துகடுமையான தண்டனைவழங்கியதற்கான வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும்.

8. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்படும் அனைத்து செயல்பாட்டு குழுக்களிலும்தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுத்தப்படும் என்று உறுதி செய்யப்படும்.

9. மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை, குழந்தை திருமண தடுப்பு அதிகாரி, தன்னார்வ அமைப்புகள்இணைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் உறுதிசெய்யப்படும்.

10. பள்ளி வாளாகத்தில் இருந்து நூறு மீட்டர் தூரம் வரை எந்த விதமான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யமுழுமையான தடை விதிக்கப்படும். அனைத்து வகையான போதை பொருட்களின் நடமாட்டம் முற்றிலுமாக தடுத்துநிறுத்தப்படும்.

11. இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் குழந்தைகள் மீது நடைபெறும் Online Child SexualExploitation & Abuse (OCSEA) குற்றங்களை தடுக்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளபடும்.


இவை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்ந்திட ஒரு தகுதியான சமூகத்தை உருவாக்கும் சிறந்த நலன் முன்வைத்துஎழுப்பப்பட்டுள்ள எங்களின் கோரிக்கைகள் இவற்றை அரசியல் கட்சிகளாகிய நீங்கள் தேர்தல் கோரிக்கையில்சேர்க்கவும் தேர்தல் களத்தில் பரப்புரையில் பயன்படுத்தவும் மேலும் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு மேற்கூறியகோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறோம்.

நம் மாநிலத்தை ஒரு குழந்தை நேய மாநிலமாக உருவாக்குவோம்i

குழந்தை நேய செயலகம்,
மாநில அமைப்பாளர், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி 
Mobile: 999 475 2121

குழந்தைகள் பாதுகாப்பு – அனைவரின் பொறுப்பு
குழந்தைகள் நேய செயலகம் – சமூகத்தின் உறுதி

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News