25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பூனை பாம்பை கண்டால் பயப்படாமல் அமைதியாக இருக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூனை பாம்பை கண்டால் பயப்படாமல் அமைதியாக இருக்கும்.

பாம்புகளை ஒரு பொருட்டாகவே பூனைகள் மதிப்பது இல்லை,   என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக, பூனையின் இரவு வேட்டை வாழ்க்கை பயங்கரமானது. தன்னிச்சையாக வளரும் பூனைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் வீட்டில் உள்ள பல்லிகள், பறவைகள். கோழிகள் மற்றும் சில நேரங்களில் பாம்புகளை கூட வேட்டையாடும்.எந்த விலங்குகளும் பாம்புகளை கண்டால் மிரண்டு விலகி விடும். ஆனால், பூனை பாம்பை கண்டால் பயப்படாமல் அமைதியாக இருக்கும். கவனமாக பார்க்கும், ஒரு வேளை அச்சுறுத்தினால் பாம்பை விடாமல் தாக்கும்.

பூனைகள் பாம்புகளை விட ஏழு மடங்கு வேகமாக எதிர் தாக்குதல் நடத்துகின்றன. இந்த வேகம் தான் பாம்பு கடியில் இருந்து பூனைகள் தப்பிக்கவும், விரைவாக திருப்பி தாக்கவும் அவைகளுக்கு உதவுகிறது.பாம்புகள் எதிரியை ஒரு நேர்கோட்டில் வேகமாக தாக்குகின்றன. நஞ்சை பாய்ச்சும் ஒரு விரைவான நச்சுகடியை மட்டுமே நம்பி இயங்குகின்றன. மறுபுறம், பூனைகள் நெகிழ்வான உடலமைப்பு, கூர்மையான பார்வை, ஒலியை துல்லியமாக கேட்கும் காதுகள், எந்த திசையிலும் தாவி குதிக்கும் திறன், கூர்மையான நகங்கள் மற்றும் பற்கள், வேகமான பாய்ச்சல் என்று பல திறன்களை கொண்டது.

பூனைகள் தங்கள் நகங்களையும், பற்களையும் பயன்படுத்தி வேகமாகவும், பெரும்பாலும் பாம்பின் தலை அல்லது கழுத்தை குறி வைத்தும் தாக்கும். பாம்பின் கழுத்து பலமாக தாக்கப்பட்டால் கழுத்து எலும்பு உடைந்து போகும். இதனால், பாம்புகள் பூனைகளிடம் இருந்து தப்பிக்க வழி தேடி ஓடும் என்கிறது ஆய்வுகள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News