25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நட்சத்திர வெடிப்பால் மாற்றமடைந்த வைரஸ். 'சூப்பர் நோவா'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நட்சத்திர வெடிப்பால் மாற்றமடைந்த வைரஸ். 'சூப்பர் நோவா'

நம் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட் சத்திரங்கள் உள்ளன. அவற் றின் ஆயுள் முடியும்போது அவை வெடித்துச் சிதறும். இந்தப் பெரு வெடிப்பை 'சூப்பர் நோவா' என்று அழைப்பார்கள்.  நம்முடைய சூரிய மண்டலத் துக்கு அருகே இந்த சூப் பர் நோவா நடக்கும்போது அதன் தாக்கம் பூமியிலும் இருக்கும். பூமியில் பல - மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு இந்த சூப்பர் நோவாவும் காரணம் என்று விஞ்ஞா னிகள் கருதுகின்றனர்.

நட்சத்திரங்கள் வெடிப்பின் போது, பலவிதமான கதிரியக்கங்கள் பிரபஞ்சம்  முழுதும் பரவும். அவை பூமியையும் தாக்கும்.எப்படிச் சூரியனிலி ருந்து வருகின்ற சூரியப் புயல் பூமியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அது போலவே இந்தக் கதிர் இயக்கங்களும் பூமியில் உள்ள உயிரினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 65 லட்சம்ஆண்டுகளுக்கு முன் பாக இப்படி நடந்த ஒரு நட்சத்திரவெடிப்பின்  போது கதிரியக்க இரும்பு பூமியை வந்து அடைந்தது.ஒரு லட்சம் ஆண்டுக ளுக்கு முன்பாக நடந்த ஒரு நட்சத்திர வெடிப்பால்ஏராளமான காஸ்மிக் கதிர் கள் பூமியை வந்தடைந் துள்ளன.

இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. உயிரினங்களுடைய மரப ணுவில் மாற்றத்தை உரு வாக்கும் என்று பல ஆய் வுகள் தெரிவிக்கின்றன.25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் இருந்து 457 ஒளி ஆண்டுகள் தொலைவில் சில நட்சத் திரங்கள் வெடித்துள்ளன.

இதே காலகட்டத்தில் ஆப்ரிக்காவில் சில ஏரிகளில் வாழ்ந்த வைரஸ்களில் வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் கதிரியக்கத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே வைரஸ்கள் இவ்வாறு தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News