25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


.சுவையான பன்னீர் புலாவ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.சுவையான பன்னீர் புலாவ்

தேவையான பொருட்கள்:

 பன்னீர்-200 கிராம்.பாஸ்மதி அரிசி - 1 கப்,வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) – 2,

சீரகம் -1/2 தேக்கரண்டி,கேரட் 1 கப்,பீன்ஸ் - 1 கப், பச்சை மிளகாய் – 2,கரம் மசாலா - 1 தேக்கரண்டி,

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,.நெய் - 2 தேக்கரண்டி,புதினா-தேவையான அளவு,கொத்தமல்லி - தேவையான அளவு,பிரியாணி இலை 1,ஏலக்காய் 2,கிராம்பு-3,மிளகு-தேவையான அளவு,இலவங்கப்பட்டை – 2,

தண்ணீர் - தேவையான அளவு,உப்பு -தேவையான அளவு

செய்முறை

 பன்னீர் புலாவ் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய200 கிராம் பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.பன்னீர் புலாவ் செய்ய அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் நெய், இரண்டு பட்டை, 3 ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, சிறிதளவு மிளகு, பொடிதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் 4 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 வெங்காயம் பொன்னிறமானவுடன் அவற்றில்1/2 கப் நறுக்கிய கேரட்,1/2 கப் நறுக்கிய பீன்ஸ்,1/2 கப் பச்சை பட்டாணி,ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும்.காய்கறிகள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு கையளவு புதினா ஒரு கையளவு கொத்தமல்லி மற்றும் வறுத்து வைத்துள்ள பன்னீர் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.பின்பு சுத்தமாக கழுவி30 நிமிடங்கள் ஊறவைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசியை இவற்றில் சேர்த்து சில நிமிடங்கள் மெதுவாக வதக்கிவிடவும். பின்பு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிட்டு பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.இப்பொழுது சுவையான பன்னீர் புலாவ் தயார். 

சமையல் குறிப்பு: பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும்.பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News