மக்காச்சோளம் வெளி மாநிலங்களிலிருந்து வருவதால் உள்ளூரில் விலை இல்லை .விவசாயிகள் கவலை ?
10 ஆயிரம் ஏக்கரில், விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப் பட்டுள்ளது. பன்றிகள், மயில்கள் தொல்லை, முறையான மழையின்மை இது போன்ற இடர்பாடுகளை கடந்து மக்காச்சோள பயிர்கள் நன்கு விளைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு 15 இல் இருந்து 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து உள்ளனர்.
அறுவடை செய்யப்படுவதால் நல்ல விலை போகும் என்று விவசாயிகள் நினைத்த நிலையில், சென்ற ஆண்டு 1 குவிண்டால் 2,500 க்கு விற்றது .இன்றைக்கு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 1200 லிருந்து 1700 வரை விலை போகிறது. அரசு தரப்பில்எந்த விதமான கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்வதில்லை. கால்நடைகள், கோழி பண்ணைகளுக்கு மக்காச்சோளம் அதிக அளவு தேவைப்படுவதால் என்றைக்கும் மக்காச்சோளத்திற்கு கிராக்கி உள்ளது.
. அரசுக்கு இது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் இதற்குரிய கூட்டங்கள் நடத்தியும் தீர்வுகாணப்படவில்லை.மக்காச்சோளத்திற்குஉரியவிலைநிர்ணயம்செய்யஅரசுமுன்வரவேண்டும்என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply