வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
ராஜபாளையம் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகஇருக்கும்.ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், வெளியூர்களிலிருந்து எண்ணற்ற பேரும் தங்களது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இங்குள்ள தோப்புகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர்.
இப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப் பன்றி. முள்ளம்பன்றி, மான், சாம்பல் நிற அணில் ராஜ நாகங்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் இங்குவசித்து வருகின்றன இங்கு போலீஸ் பாதுகாப்பு வசதி எதுவும் இல்லை.இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆதலால் சுற்றுலா பயணிகள் பெரிதும்சிரமப்படுகின்றனர். எனவே வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேற்கண்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply