25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாடித் தோட்டத்தில் 90 நாட்களில் பச்சை மிளகாய் அறுவடை செய்யலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாடித் தோட்டத்தில் 90 நாட்களில் பச்சை மிளகாய் அறுவடை செய்யலாம்

மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்யக்கூடிய காய்கறிகளில் பச்சை மிளகாயும் ஒன்று. எந்தவொரு உணவிலும் காரம் தேவைப்படுகிறது. இதற்கு பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறையும் காய்கறி வாங்கும் போது 5 ரூபாய், 10 ரூபாய்க்கு பச்சை மிளகாய் கொடுங்கள் என கேட்கிறோம். மாடி தோட்டத்தில் அதை எளிதாக வளர்க்க முடியும் என்றால் 5 ரூபாயை கூட மிச்சப்படுத்தலாம். சரியாக பயிரிட்டு நோய் தாக்குதல் இன்றி வளர்த்து வந்தால்90 நாட்களில் பச்சை மிளகாய் அறுவடை செய்யலாம். 

பச்சைமிளகாய் செடியாக வளரும். இதற்கு மண் கலவை மிக முக்கியம்.15*12 அளவில் மண் தொட்டிபோதுமானது. பச்சை மிளகாய் வளர ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் சில களை செடி வளரும். இதை அவ்வப்போது அகற்றிட வேண்டும். பச்சை மிளகாய் வளர்ப்புக்கு20 விழுக்காடு செம்மண்,40 விழுக்காடு கோகோபீட்,40 விழுக்காடு உரம்கலவை தேவை.40 விழுக்காடு உரத்தில் மக்கிய மாட்டு உரம், மண் புழு உரம் அடங்கும். சூடோமோனாஸ் பயன்படுத்தி நோய், பூச்சி பாதிப்புகளை தவிர்க்கலாம்.

பச்சைமிளகாய் வளர்ப்புக்கு பிரத்யேகமாக விதை வாங்க வேண்டிய தேவையில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் வர மிளகாய் இருந்தால் போதும். நீங்கள் குண்டு மிளகாயும் பயன்படுத்தலாம். ஒரு காய்ந்த மிளகாய் எடுத்து அதில் உள்ள விதைகளை எடுத்து மண் கலவையில் போட்டு மூடி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். பச்சை மிளகாயை வெயில் காலத்தில் வளர்ப்பது நல்லது. மழை காலத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பது சற்று கடினம்.

ஒரு வாரத்தில் பச்சை மிளகாய் செடி ஓரளவு வளர்ந்திருக்கும்.4,5 செடிகள் வளர்ந்திருந்தால் அவற்றில் இரண்டை மட்டும் ஒரு தொட்டியில் வளருங்கள். மற்றதை வேறு தொட்டிக்கு மாற்றி விடவும். களை செடிகள் இருந்தால் நீக்கி விடுங்கள். பச்சை மிளகாய் செடி வளர மிதமான ஈரப்பதம் போதும். மண் காயும் நேரத்தில் மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக ஈரப்பதம் இலை சுருட்டல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இலை சுருட்டல் பாதிப்பு வந்தால் சூடோமோனாஸ்10,15 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில்கலந்து செடியின் மீதும் வேரிலும் தெளிக்கவும். புளித்தமோர்இருந்தால்அதைஒருலிட்டர்தண்ணீருடன்கலந்துசெடியில்தெளித்தால்இளைசுருட்டலைதவிர்க்கலாம். புதியஇலைகள்நன்றாகவளரும்.90 நாட்களில் பச்சை மிளகாயை சாகுபடி செய்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News