25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம் வனச் சரகங்களுக்கு இடையே உள்ள ராக்காச்சி அம்மன், சேத்துார், விரியன்கோயில், அணைத்தலை ஆறு, கல்லாத்து ஓடை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இரவு நேரத்தில் மலையடிவார விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் ராஜபாளையம் 6வது மைல் நீர்தேக்கம் கல்குவாரி ஒட்டி வானூத்தி பறம்பு அருகே  தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை 40 தென்னங்கன்று குருத்துகள், வளர்ந்த மா மரக்கிளை பாதியாக உடைத்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும், வாழைக் கன்றுகளை தின்றும் சேதப்படுத்தி உள்ளது.  மீண்டும் இவற்றை உருவாக்க லட்சக்கணக்கில் பணமும், காலமும் தேவைப்படும். தகுந்த இழப்பீடு வழங்குவதுடன், யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News