25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வரம் தருபவர் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரம் தருபவர் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர்.

தடைகளை தகர்த்து வரம் தர காத்திருக்கிறார் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர். செக்டர் 22 ஜி பிளாக்கில் உள்ள இக்கோயிலை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வகிக்கிறது.

காமம், கவலை, கோபத்தால் மனித மனம் அலை பாய்கிறது. 'அது எப்படியாகுமோ? இது எப்படியாகுமோ?" என்ற வருத்தம் அடிக்கடி வருகிறது. குழந்தைப் பருவம் முடிந்து வளர வளர இந்த குணம் அதிகரிக்கிறது. ஆனால் குழந்தையிடம் சோர்வோ,மனச்சுமையோ ஏதுமில்லை. அடம் பிடித்தாலும் சற்று நேரத்தில் மறந்து விட்டு மற்ற குழந்தைகளுடன் விளையாடுகிறது. இந்த சிறுகுழந்தைகள் வழிபடும் குழந்தை சுவாமியாக விநாயகர் இருக்கிறார்.

கனமான யானை வடிவில் இருந்தாலும், மூஞ்சூறு சுமக்கும் விதத்தில் பரம லேசான மூர்த்தியாகவும் இருக்கிறார். அவரது யானை முகத்தை பார்த்தாலே பரவசம் உண்டாகும். அந்த விநாயகராக இங்கு மூலவராக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தடைகள் விலக சங்கடஹர சதுர்த்தியன்று சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

இதற்கான புராண காரணம் இதோ.. ஒருமுறை சிவனிடம், "உங்கள் தலையை எனக்குப் பலி கொடுங்கள்" எனக் கேட்டார் விநாயகர். இதற்காக மூன்று கண்கள் கொண்டதேங்காயை உண்டாக்கி சிதறுகாயாக அர்ப்பணித்தார் சிவன். ஆணவம் என்னும் ஓட்டை உடைத்தால் அருள் என்னும் இளநீர் வெளிப்படும் என்பதே இதன் தத்துவம்.

எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய்உடைத்தால் பிரச்னை தவிடு பொடியாகி விடும்.இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஆக. 29, 2022ல் நடந்தது. துர்கை, நவக்கிரக சன்னதியும் இங்குள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News