25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


500 'ஸ்டார்ட்அப்'கள் ஓராண்டில் துவக்குவதை ஊக்குவிக்க  தமிழக அரசு திட்டம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

500 'ஸ்டார்ட்அப்'கள் ஓராண்டில் துவக்குவதை ஊக்குவிக்க  தமிழக அரசு திட்டம் .

சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி; அனைத்து நகரங்கள்,கிராமங்களிலும் தொழில் ஐடியா வைத்து உள்ளவர்களை கண்டறிந்து, ஸ்டார்ட்அப் நிறுவனம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவக்க, 'வெஞ்சர் பில்டர்' எனப்படும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதற்கு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

20 புதியதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்புகள், இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும்.அவை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரங்களில், தொழில் ஐடியா வைத்துள்ள நபர்களை சந்தித்து, தொழில் துவக்குவது முதல் அதன் வாயிலாக பொருட்களை உற்பத்தி செய்வது வரை உதவிகளை செய்ய வேண்டும்.ஒரு வெஞ்சர் பில்டர் களை ஊக்குவிக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும்.ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனம், ஒப்பந்தம் செய்ததில் இருந்து, 12 மாதங்களுக்குள், 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவக்க உதவி செய்ய வேண்டும். இம்முயற்சியின் வாயிலாக ஆண்டுக்கு, 500 ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனத்துக்கு 2.50 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News