25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழகத்தின் பரனிகா.தேசிய உள்ளரங்கு தட களத்தில் போல் வால்ட் போட்டியில் சாதனை படைத்தார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தின் பரனிகா.தேசிய உள்ளரங்கு தட களத்தில் போல் வால்ட் போட்டியில் சாதனை படைத்தார் .

 நேற்று புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் ,தேசிய இந்தியாவில் முதன் முறையாக,  தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், துவங்கியது. பெண்களுக்கான போல் வால்ட் போட்டி நடந்தது. தமிழகத்தின் பரனிகா, 4.22 மீ., உயரம் தாவி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் கைப்பற்றினார். 

. தமிழகத்தின்  'டிரிபிள் ஜம்ப்' வீரர் பிரவின் சித்ரவேல் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார். 7.78 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஒடிஷா வீரர் சாருண் (7.80) தங்கம், ரயில்வேஸ் அணியின் டேவிட் (7.69) வெண்கலம் வென்றனர். 

 தமிழகத்தின் பாலாஜி (16.74 மீ.,) ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெண்கலம்  கைப்பற்றினார். பி.எஸ். எப்., அணியின் ரவி குமார் (17.17), உத்தரகாண்ட்டின் ஆதிஷ் (16.92) தங்கம், வெள்ளி வென்றனர்.

 பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட, குண்டு எறிதல் தமிழகத்தின் அக்ஷயா (11.89 மீ.,) வெண்கலப் பதக்கம் வென்றார். கேரளாவின் டோனா மரியா (13.35), ஹரியானா வின் குஷ்பூ (12.03) முதல் இரு இடம் பெற்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News