'ஆப்பரேஷன் சிந்துார்' பாகிஸ்தானை நேற்று 'ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா.
வியோமிகா சிங்
என்.சி.சி.,யில் சேர்ந்த வியோமிகா சிங், பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட வியோமிகா சிங், 2019 டிச., 18ல் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டார். . 'வியோமிகா' ('வானத்தின் மகள்') என பொருள்.
சேடக், சீட்டா போன்ற விமானங்களை ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மிகவும் சிரமமான நிலப்பரப்பு கொண்ட இடங்களில் இயக்கியுள்ளார்.
சோபியா குரேஷி
நம் ராணுவத்தின், 'கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ்' என்ற பிரிவில் அதிகாரியாக உள்ள சோபியா குரேஷி, குஜராத்தைச் சேர்ந்தவர். உயிரி வேதி யியலில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். கணவரும் ராணுவ அதிகாரி.. 2016ல் 18 நாடுகள் பங்கேற்ற'எக்சசைஸ் போர்ஸ் 18' அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி சோபியா குரேஷி ஆவார்.
எல்லைக்கோட்டை தாண்டாமலே ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அதை இரு ஜூனியர் பெண்' ராணுவ அதிகாரிகள் மூலம் விளக்கம் அளித்து உலக நாடுகளை அசர வைத்துள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு நமக்கு தொல்லை தந்து வந்த பாகிஸ்தானை நேற்று 'ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா.
ஏப். 22ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன்பே சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ளாத காஷ்மீர் முஸ்லிம்கள் கூட இந்த சம்பவத்தால் பொங்கி எழுந்தனர். பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கும் அவர்களை வளர்த்து விடும் பாகிஸ்தான் அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கும் குரல் எழுந்தது.
நதி நீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, இறக்குமதி நிறுத்தம், துாதரக உறவு துண்டிப்பு என, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், ராணுவ நடவடிக்கை தேவை என்ற குரல் தணிய வில்லை. இதை தொடர்ந்து புதன் அதிகாலை 1:05 முதல் 1:30 மணி வரை 25 நிமிடங்களில் யாரும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நடத்தியது. புதன்கிழமையன்று நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை அறிந்து பாகிஸ்தான் அரசும் மெத்தனமாக இருந்தது. அதை பயன்படுத்தி, புதன்கிழமை விடிவதற்குள் தாக்குதலை அரங்கேற்றியது இந்தியா.
பாகிஸ்தான் சுதாகரிப்பதற்குள், 25 நிமிடத்தில் இந்த துல்லிய தாக்குதல் நடந்து முடிந்தது. பொறுமை யாக, துல்லியமாக திட் டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை, 24 ஏவு கணைகள் செலுத்தி தகர்த்தது இந்தியா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலை நகரமான முசாபராபாத், கோட்லி, பஹவால்புர், ராவலகோடி, சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத் தாக்கு, ஜீலம், சக்வால் ஆகிய இடங்களில் செயல் பட்டுவந்த பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையங்கள், தலைமை நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.
ஐந்து இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு பாகிஸ்தானிலும் உள்ளன. தாக்குதலில் 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது. அவர்களில் 3 பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்கள். ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகளான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட இவ்வளவு குறைந்த சிவிலியன் பலிகளுடன் தாக்குதல் நடத்தியது இல்லை என்பதால்,இந்தியாவின் நடவடிக்கை உலகம் முழுவதும் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையிடங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0
Leave a Reply