25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முன்னோடி வங்கி  மற்றும்  அனைத்து வங்கிகளின் சார்பில், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு சிறப்பு  கல்விக்கடன் வழங்கும் முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம்.

.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (13.11.2025) மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்  மற்றும் தனியார் வங்கிகளின் வாயிலாக, கல்லூரி மாணவ , மாணவியர்களுக்கு சிறப்பு  கல்விக்கடன் வழங்கும் முகாம்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, I A S., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இச்சிறப்பு முகாமில், 200 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக்கடன் சம்மந்தமாக எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். மேலும், கல்விக்கடன் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு , அவ்விண்ணப்பங்கள் வங்கிக் கிளைகளில் பரிசீலனை செய்யப்பட உள்ளன.

அவ்வாறு, பரிசீலனை செய்யப்படும் விண்ணப்பங்களில், தகுதியான மாணவர்களுக்கு 20 – நாட்களுக்குள்ளாக கல்விக் கடன் வழங்கப்படும்  என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு. பாண்டிச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டிற்கு கல்விக்கடன் இலக்காக ரூபாய் 38.11 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் செப்டம்பர்-2025  வரை 576 மாணவர்களுக்கு ரூபாய்  27.61 கோடி கல்விக் கடனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.அதனைத்தொடர்ந்து, இம்முகாமின் சிறப்பு நேர்வாக, 152 மாணவர்களுக்கு ரூபாய்.8.76 கோடி கல்விக்கடன் ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சு.பாண்டிச்செல்வன் அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள்,  பெற்றோர்கள் மற்றும்  மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News