25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மனு பாகர் ஆசிய துப்பாக்கிசுடுதலில்  இரண்டு வெண்கலம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனு பாகர் ஆசிய துப்பாக்கிசுடுதலில்  இரண்டு வெண்கலம் .

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில் 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சுருச்சி, பாலக் குலியா இடம் பெற்ற அணி பங்கேற்றது.மொத்தம் 1730 புள்ளி எடுத்து, வெண்கலம் வென்றது. சீனா (1740), தென் கொரிகயா (1731) தங்கம், வெள்ளி வென்றன. 

தனிநபர் பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டி ,தகுதிச்சுற்றில் மனுபாகர் 583 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். ஈஷா சிங் 9 (577), சுருச்சி 10 (574), பாலக் 13வது (573) இடம் பெற்று வெளியேறினர். பைனலில் கடைசி நேரத்தில் சறுக்கிய மனு பாகர், 219.7 புள்ளியுடன் 3வது இடம் பெற, வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆசிய சாம்பியன் ஷிப்பில் மனு பாகர் வென்ற 10வது பதக்கம் .

ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா (ஏர் பிஸ்டல்) தங்கம் வென்றார். அணிகளுக்கான பிரிவில் ராஷ்மிகா, வன்ஷிகா, மோகினி இடம் பெற்ற இந்திய அணி தங்கம் வென்றது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News