25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை  தடுக்கும் காந்தப்புல மாற்றம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை  தடுக்கும் காந்தப்புல மாற்றம்

சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை தடுக்கும் பூமியின் காந்த மண்டலம்.பூமியில் காந்த மண்டலம் தான் சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை தடுக்கிறது. ஆனால் மின்காந்த மண்டலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில ஆயிரம் ஆண்டு களுக்கு ஒரு முறை மாற்றங்கள் ஏற்படும். வடபுலம் தென்புலமாக மாறும், மறுபடியும் தென்புலம் வடபுலமாக மாறும். 7,80,000 ஆண்டுகளுக்கு முன்பாக இப்படியான மாறுதல் நடந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படியான முழு மையான மாற்றம் ஏற்படுவதற்கு இடையிலே காந்த மண்டலத்தில் அவ்வப்போது சிறிய மாற்றங்கள் ஏற்படும்.இவை சில ,நூறு  ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள்  வரைநீடிக்க  வாய்ப்பு உள்ளது. அத்தகைய ஒரு சிறிய மாற்றம் 42,000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்துள்ளது என்றுவிஞ்ஞானிகள்கண்டுபிடித்துஇருக்கின்றனர்.

நியூசிலாந்து நாட் டில் ஒரு மரத்தின் தொல்லெச்சம் கண்டு பிடிக்கப்பட்டது. மரங்களில் உள்ள வளையங்களை வைத்து மரங்களின் வயதையும் சுற்றுப் புறத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கண்டறிய முடியும். ஆனால், இந்த மரத்தை ஆராய்ந்த போது ஒரு புது விஷயம் பதிவாகி இருந்தது. அதாவது 42,000 ஆண்டுகளுக்கு முன்பாக, பூமியின் காந்த மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பூமியில் ரேடியோ - கார்பனின் அளவுதிடீரென்று அதிகரித்துள்ளது என்பது  தெரியவந்தது.காந்த மண்டல  மாற்றத்தால் பூமியின் ஓசோன் மண்டலம் மெலிவுற்றது. இதனால் சூரியனிலிருந்து வந்த புற ஊதாக் கதிர்கள் தடுக்கப்படாமல் நேரடியாகப் பூமிக்கு வந்துள்ளன. இந்தக்கதிர்கள் பட்டுப் பல உயிரினங்கள் அழிந்துள்ளன. நம் மனித இனமான ஹோமோ சேபியன்ஸ் இந்தக் கதிர்களிடம் தப்பிப்பதற்காகவே குகைகளில் தஞ்சம் அடைந்தனர். சக மனித இனமான நியாண்டர்தால் இனம் பெருமளவில் அழிந்தது கூட இதனால் தான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவையெல்லாம் தற்போது அனுமானங்களாக முன் வைக்கப்படுகின்றன. இன்னும் தெளிவான ஆய்வுகள் இருந்தால் மட்டுமே இவற்றை உறுதிப்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News