25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இஸ்ரோ  வெற்றிகரமாக இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்களை, விண்வெளியில்  இணைத்து உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இஸ்ரோ வெற்றிகரமாக இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்களை, விண்வெளியில்  இணைத்து உள்ளது.

 விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை,'ஸ்பேஸ் டாக்கிங்' பரிசோதனை திட்டத்தின் கீழ், 'இஸ்ரோ' வெற்றிகரமாக இணைத்துள்ளது.வரும் 2035க்குள், விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.

 

'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில், விண்வெளியில் செயற் கைக்கோள்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற் கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.பி.எஸ்.எல். வி.,சி -60 ராக்கெட்வாயிலாக, இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இரண்டு செயற்கைக் கோள்கள்ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, 2024 டிச., 30ல் விண்ணில் செலுத்தப்பட்டன.

 

 கடந்த ஜன., 16ல் ஒரே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. 'ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை , இதன் வாயிலாக,  வெற்றிகரமாக மேற் கொண்ட நான்காவது நாடு, என்ற பெருமையை நம் நாடு அடைந்தது.ஒருங்கிணைப்பு நடந்த இரு மாதங்களுக்கு பின், இரண்டு செயற்கைக் கோள்களும் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், 'ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தின் கீழ், விண் வெளியில்  இஸ்ரோ வெற்றிகரமாக இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்களை  இணைத்து உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News