சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடரில் இந்தியாவின் சுஜீத் பைனலுக்கு முன்னேறினார்.
சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில்நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் சுஜீத், பிரான்சின் காம்ஜத்தை 65 கிலோ பிரிவில் காலிறுதியில் 10-0 என வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் சுஜீத், அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபர் மோதினர். சுஜீத் 11-0 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத், 61 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடந்தன. முதல் போட் டியில் தோற்ற அமன், அடுத்த போட்டியில் ஈரானின் ரேஜாவை 12-2 என வென்றார்.
0
Leave a Reply