25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கொத்தமல்லி தழையை வீட்டிலேயே எப்படி வளர்க்கலாம்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொத்தமல்லி தழையை வீட்டிலேயே எப்படி வளர்க்கலாம்?

உணவுக்கு சிறந்த சுவையைத் கொத்தமல்லி தரும். இதை வீட்டிலேயே ரசாயனங்கள் இல்லாமல் பயிரிடலாம்.15,20 நாட்களில் உங்கள் மொட்டை மாடியில் அல்லது உங்கள் தோட்டத்தில் கொத்தமல்லியை வளர்க்கலாம்.1 பங்கு வண்டல் மண்,1 பங்கு உரம்(வெர்மி கம்போஸ்ட், மாட்டு சாணம், இலை உரம்) மற்றும் ஒரு கைப்பிடி வெள்ளை மணல் ஆகியவற்றை கலக்கவும். பானை அல்லது தொட்டியை எடுத்து, அதிகப்படியான நீர் வெளியேறதொட்டியில்ஒரு துளைசெய்து,அதன்மீது சில சிறியகற்களை பரத்தினால். அதிலிருந்து மண் வெளியே வராது. பின்னர் மேலே மண்ணை தூவவும். 

வீட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி விதைகளையும் நடலாம். கொத்தமல்லி விதைகளை ஒரு துண்டில் போட்டு, அதை இரண்டாகப் பிரிக்க கடினமான ஒன்றை அழுத்தவும் மல்லி விதை இரண்டாகப் பிரியும் ரெம்பவும் நொறுக்கி விடக்கூடாது. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.விதைகளை மறுநாள் காலையில் தயாரிக்கப்பட்ட மண்ணில் சமமாக பரப்பவும். கொஞ்சம் பரவலாக விதையைத் தூவ வேண்டும். நெருக்கி விதைக்கக் கூடாது பிறகு லேசாக மேலே மண்ணைதூவ வேண்டும். தண்ணீர் பாய்ச்சினால், விதைகள் மண்ணில் மிக ஆழமாகச் சென்று விடும் எனவே இந்த நேரத்தில் மண்ணுக்கு மிக லேசாக தண்ணீர் விடுவது அவசியம். மண் எப்பொழுதும் ஈரமாக இருப்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

-10 நாட்களில் சிறிய நாற்றுகள் வெளிவர ஆரம்பிக்கும். நாற்றுகள் ஒன்றன் மேல் ஒன்றாக வளர்ந்தால் சிலநாற்றுகளை கையால் எடுத்து விட்டால். தொட்டியில் உள்ள செடிகள் சரியாக வளர வாய்ப்பளிக்கும்.20,25 நாட்களுக்குள் தினசரி உபயோகத்திற்கு கொத்தமல்லி இலைகளை பறிக்கலாம். மார்ச் வரை மொட்டை மாடித் தோட்டத்தில் கொத்தமல்லி கிடைக்கும். அதன் பிறகு  கொத்தமல்லிதழையைநிழல் தரும் இடத்திற்கு மாற்றினால், ஆண்டு முழுவதும் கொத்தமல்லிதழை கொத்தமல்லி இலைகளை பறிக்கும் போது, அவற்றை ஒருபோதும் தண்டுகளுடன் சேர்த்து பறிக்க வேண்டாம். மாறாக, மேலே இருந்து தேவையான  இலைகளை பறிக்கவும். மீண்டும் மல்லிதழை துளிர்த்து  வளரும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News