25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜி.எஸ்.எல்.வி., எப் 15 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்ட 100வது ராக் கெட் ,இஸ்ரோ சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜி.எஸ்.எல்.வி., எப் 15 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்ட 100வது ராக் கெட் ,இஸ்ரோ சாதனை

நம் நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக் கோளை வடிவமைத்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுமையம்விண்ணில்நிறுத்திவருகிறது.நாட்டின்தரைவழி, கடல்வழி, வான்வழிபோக்குவரத்துக்கும்,பாதுகாப்புக்கும் உதவ ஐ.ஆர்.என். எஸ்.எஸ்., எனப்படும்.இந்தியமண்டலவழிகாட்டுதல்செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டது.

இதன் வாயிலாக 2013 முதல் 2018 வரை எட்டு வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றி கரமாக விண்ணில் நிறுத்தப்பட்டன. இதனால் நம் நாட்டிற்கு என்று தனி வழிகாட்டி 'நாவிக்' தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது.  ''நாவிக்' தொழில்நுட்பத்தில் ஐ.ஆர்.என்.எஸ். எஸ்., 1ஜி செயற்கைக் கோளுக்கு மாற்றாக என். வி.எஸ்., 01 செயற்கைக்கோள் 2023 மே மாதம் விண்ணில் நிறுத்தப்பட் டது. 

அதிநவீன தொழில்நுட்பத்தில் என். வி.எஸ்., 02 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 2250 கிலோ எடை உடைய இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 6:23 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி., எப் 15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.பூமியில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்கள், 17வது விநாடியில் 322.93 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில் திட்டமிட்டபடி செயற்கைக்கோளை ராக்கெட் வெற்றிகரமாக நிறுத்தியது. ஜி.எஸ்.எல்.வி., எப் 15 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்ட 100வது ராக்கெட் என்ற பெருமையை பெற்று இஸ்ரோ சாதனை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News