25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சூழலை காக்க களமிறக்கப்படும் மீன்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூழலை காக்க களமிறக்கப்படும் மீன்கள்.

மெத்தில் மெர்குரி ( Methyl mercury ) மிக  மோசமான நச்சுப்பொருள்.நிலக்கரியை எரிக்கும் போது இது  வெளிப்படும். அதே போல் தொழிற்சாலை கழிவுகளிலும் இருக்கும். ‎அவற்றை சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் கொட்டு வதால் அங்கு வாழும் மீன்களின்  உடல்களில் நுழைகிறது. இந்த மீன்களை மனிதர்கள் உட்கொண்டால், அவர்களு டைய உடலிலும் இந்த நச்சு சேர்ந்து விடும்.

இது நரம்பு மண்டலத்துக் கும் ஆபத்தானது. எனவே இந்தக் கழிவை அகற்றுவதற் கான சிறந்த வழியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். தற்போது ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த மக்வாரிபல்கலை ( Macquarie university ) ஆய்வாளர்கள் ஜீப்ரா மீன்க னையும் சில பூச்சிகளையும் கொண்டு, இந்தக் கழிவுகளை நீக்கலாம் என்று கண்டறிந் துள்ளனர். அதாவது, முதலில்மீன்கள், பூச்சிகளின் டிஎன் ஏவில் ஈ.கோலை (E. coli) பாக்டீரியாவின் மரபணுக்க ளைச் செலுத்துவர் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட  மரபணுக்களைஉடைய மீன்கள், நீர்நிலை களில் உள்ள மெத்தில் மெர் குரியை உட்கொண்டு அதைச் சாதாரண பாதரச வாயுவாக மாற்றிவிடும்.

இந்த வாயு மெத்தில் மெர் குரியை விடக் குறைவான ஆபத்தையே ஏற்படுத்தும். இந்தப் பாதரசம் மீன்களின் உடலில் தாங்காது என்பதால், மீன்களுக்கும் பெரிய அள வில் பாதிப்பில்லை. இந்த மீன்களை உரிய நீர் நிலை களில் நேரடியாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வருவ தற்கு முன்பாக. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.அவற்றில் வெற்றி பெற் றால் மட்டுமே இவற்றை நாம் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News