25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்களை அகற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்களை அகற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு வீட்டு  வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான இந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள  சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் பழுதடைந்து குடியிருக்கத்தக்க இயலாத நிலையில் உள்ளதால் இடித்து இக்கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளன.

  இப்பணிக்கு அரசு துறை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் 06.11.2025 முதல் https://tntenders.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஏல விபரங்களை பார்த்து மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு  மதுரை வீட்டு வசதி பிரிவு, செயற்பொறியாளர் (ம) நிர்வாக அதிகாரி அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News