25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கத்திரிக்காய் செடி அதிகமாக காய்க்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கத்திரிக்காய் செடி அதிகமாக காய்க்க...

வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்கள் அனைவருமே வைக்க வேண்டிய முக்கியமான செடியாக இந்த கத்திரிக்காயை சொல்லலாம். ஒரே ஒரு கத்திரிக்காய் செடியாவது வீட்டில் வளர்த்தால் நம்முடைய தேவைக்கு கடைகளில் வாங்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம். கத்திரிக்காய் விதைகளை நாம் நடவு செய்வதற்கு முன்பாக விதைகளை உரத்தில் ஊற வைக்க வேண்டும். உங்களிடம் உரம் ஏதும் கைவசம் இல்லை என்றால், மோரை நன்றாக புளிக்க வைத்து அதில் விதைகளை ஒரு மணி நேரம் வரை ஊற விட்டு அதன் பிறகு எடுத்து நடவு செய்யும் போது செடிகள் நன்றாக வளர ஆரம்பிக்கும்.

இந்த கத்திரிக்காய் செடியானது வளர அதிக இடம் தேவைப்படும். எனவே அதை சுற்றிக் பரவலாக இடமிருந்தால் நன்றாக படர்ந்து வளரும். அதே சமயம் கத்திரிக்காய் செடியில் இலைகள் அதிகம் இருந்தாலும் காய்கள் அதிகம் வைக்காது. இதில் பழுத்த இலைகள் அல்லது தேவையில்லாமல் செடியின் அடிப்பகுதியில் இருக்கும் இலைகளை எல்லாம் அவ்வப்போது நாம் எடுத்து விட வேண்டும். இதன் மூலம் சத்துக்கள் வீணாகாமல் அதிகமாக காய் வைக்கும். அதே போல கத்திரிக்காய் செடிகளை ஓரளவிற்கு வெயில் படும் இடத்தில் வைத்தாலே நல்ல விளைச்சலை பார்க்க முடியும். அடுத்து இந்த செடிகளுக்கு உரமாக நம் வீட்டு கிச்சன் கழிவுகளை கம்போஸ்டாக மாற்றி கொடுக்கலாம். இத்துடன் மீன் அமிலம் சேர்த்து கொடுக்கும் பொழுது செடிகள் நன்றாக செழித்து வளரும். இவையெல்லாம் கொடுத்த பிறகும் செடியில் பூ வைத்து பூக்கள் உதிர்ந்தால் வாரம் ஒரு முறை பஞ்ச காவ்வியா தெளிக்கலாம். இதை செய்தாலும் வைக்கும் பூக்கள் அனைத்துமே கண்டிப்பாக உதிராமல் காய் வைக்கும்.

இந்த உரங்கள் ஏதும் உங்களிடம் இல்லை என்றால், கத்திரிக்காய் செடிகளுக்கு செலவே இல்லாத ஒரு அற்புதமான சத்து நிறைந்த உரத்தை நாமே தயார் செய்து விடலாம். அதற்கு புங்க மரத்து பூக்கள் அல்லது விதை இரண்டில் எது கிடைத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை நன்றாக நிழலில் காய வைத்து எடுத்து பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் ஒரு முறை செடிகளின் வேர்ப்பகுதியில் இந்த பொடியை தூவி மூடி விடுங்கள் போதும். இந்த உரத்தை தொடர்ந்து கொடுத்து வரும் பொழுது கத்திரிக்காய் செடி மரம் போல வளர்ந்து பெரிய பெரிய இலைகளுடன் அதிகமான பூ வைத்து கொத்து கொத்தாக காய்க்க தொடங்கி விடும்.கத்தரிக்காய் செடிகளை அதிக அளவு வைத்து வளர்ப்பவர்கள் இந்த செடிகளுக்கு அருகில் சாமந்தி செடியை வளர்த்தால் அந்தச் செடிகளின் மூலம் தேனீக்கள் அதிகமாக வந்து மகரந்த சேர்க்கை நடைபெறும். இதன் மூலம் பூக்கள் ஒன்று கூட உதிராமல் அனைத்துமே காய்க்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News