25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டோலேஷ்வர் மகாதேவர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டோலேஷ்வர் மகாதேவர்

நேபாளத்தில் உள்ள பக்தபூர் நகரில், சூரிய விநாயக் பகுதியில் உள்ளது டோலேஷ்வர் மகாதேவ் கோயில். இயற்கை ஆர்வலர்கள் மலை, காடுகளை ரசித்தபடி இக்கோயிலுக்கு சென்று வரலாம்.

அரனிகோ நெடுஞ்சாலையை விட்டு விலகி, அடர்ந்த மலையை நோக்கி வாகனம் செல்கிறது. பசுமையான தாவரங்கள், மலைகள், வளைவான சாலைகள் என பக்தபூர் நகரின் அழகான காட்சியை வழி நெடுக கண்டு களிக்கலாம். பிமலேஷ்வர், சிபரே மகாதேவ் கோயில் என்றும் இக்கோயிலை அழைக்கின்றனர். கோயிலுக்கு வெளியே பெரிய நந்தி சிலை, உயரமான திரிசூலம் பக்தர்களை வரவேற்கிறது.

பகோடா பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலின் கருவறையில் மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். பழமையான இந்த சிவலிங்கம் துவாபர யுகத்தின் முடிவில் தோன்றியது என்பது சிறப்பு.கேதார்நாத் கோயிலின் நடைமுறைகளை பின்பற்றி இங்கு காலை முதல் மாலை வரை ஆரத்தி சடங்குகள் நடக்கிறது.

கேதார்நாத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த காலத்தில் பசுவின் வடிவில் சிவபெருமானை வழிபட்டனர். அந்த பசுவின் தலைப்பகுதி,இந்தக் கோயிலிலும், மற்ற பாகங்கள் கேதார்நாத் கோயிலிலும் உள்ளன. அதனால் கேதார்நாத் கோயில் முறைப்படியே பூஜை நடக்கிறது .கேதார்நாத் கோயிலை தரிசித்த பின்னரே பக்தர்கள் இங்கு வருகின்றனர்.பசுவாக இருந்த சிவனின் உடல், தலைப்பகுதி இரண்டையும் வழிபட புண்ணியம் இருந்தால் மட்டுமே தரிசிக்க முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *