25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கொடி... 2030 போட்டிக்கு பிரமாண்ட வரவேற்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கொடி... 2030 போட்டிக்கு பிரமாண்ட வரவேற்பு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த உள்ள இந்தியாவிடம் காமன்வெல்த் கொடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. குறிப்பாக குத்துச்சண்டையில் 7 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. 2030-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியை முன்னிறுத்தும் வகையில் இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் 'உலகம் ஒரே குடும்பம்' என்ற இந்திய தத்துவத்தை பிரதிபலிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

'வந்தே மாதரம்' பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான மனுஷி சில்லர் தலைமையில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாடினர். இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தனது மகன்கள் சித்தார்த், ஷிவத்துடன் இணைந்து பாடியதோடு, குஜராத் பாடகி பூமி திரிவேதியும் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News