கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 01.05.2025 அன்றைய தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 27.04.2025 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 04.05.2025 அன்றைய தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் 100விழுக்காடு உயர்கல்விச் சேர்க்கையை வலியுறுத்தி நடைபெறும், இந்த நெடுந்தூர ஓட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.
ஏற்கனவே பதிவு செய்த மாணவ, மாணவிகளோடு புதியதாக பதிவு செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். 04.05.2025 அன்று காலை 05.00 மணியளவில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் முதல் 1000 மாணவ, மாணவிகளுக்கு டி-சர்ட் பரிசாக வழங்கப்படும். மேலும் முதல் பரிசு ரூ.40,000, இரண்டாம் பரிசு ரூ.30,000, மூன்றாம் பரிசு ரூ.15,000, நான்காம் பரிசு - ரூ.10,000, ஐந்தாம் பரிசு - ரூ.5,000 வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 96988-10699 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply