25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

இந்நிலையில் பெட்ரோல், டீசல் கார்களின் அடுத்தக்கட்டமாக எலெக்ட்ரானிக் கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் சீன கார் நிறுவனங்களோ ஒருபடி மேலே போய் எலெக்ட்ரானிக் கார்களை பறக்கும் கார்களாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன. 

 விமானங்கள் பறக்கும் தொலைவுக்கு அல்லாமல் பூமி பரப்பிலிருந்து சில கிலோ மீட்டர் Low Altitiudeல் பறக்கும்படி இந்த கார்களின் திறன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் கார் தயாரிப்பு போட்டியில் சீனாவை சேர்ந்த செர்ரி என்ற நிறுவனம் தனது ப்ரோட்டோடைப் eVTOL பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த கார் மாடல் வெற்றிகரமாக பறந்து நிரூபணமான நிலையில், பறக்கும் கார்களுக்கான அனுமதி கோரி சீன அரசிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.

வரும் அக்டோபர் மாதத்தில் செர்ரி நிறுவனம் தனது பறக்கும்  eVTOL கார்களை கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் போக்குவரத்துக்கான அடுத்தக்கட்டமாக இந்த பறக்கும் கார்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்ற தொல்லைகளை இது வெகுவாக குறைப்பதுடன், சாலையில் செல்லும் கார்களை விட விரைவாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்கிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News