25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர்

சென்னை, ஹயாத் ஓட்டலில்,வரும் ஆகஸ்ட்6 முதல்15 வரை, சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடரின் மூன்றாவது சீசன், நடக்க உள்ளது.தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ், சாலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரனவ், கடந்த 2024ல் சாலஞ்சர் பிரிவில் கோப்பை வென்றதால், இம்முறை மாஸ்டர்ஸ் பிரிவில் களமிறங்குகிறார்.

இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான சாலஞ்சர் பிரிவில் கார்த்திகேயன் முரளி, லியோன் மென் டோன்கா, வைஷாலி, ஹரிகா, அபிமன்யு, ஆர்யன், அதிபன் பாஸ்கரன், இனியன், பிரனேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் ரூ.25 லட்சம்,2,3வது இடம் பெற்றால் ரூ.15 லட்சம்,ரூ.10 லட்சம் பரிசு கிடைக்கும், சாம்பியன் வீரர்,'பிடே' தரவரிசையில்24.5 புள்ளி பெறலாம். இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில்('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.சாலஞ்சர்ஸ் பிரிவில் வென்றால் ரூ.7 லட்சம்,2026ல் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News