கற்கண்டு சாதம்.
தேவையான பொருட்கள்-
பச்சரிசி – ஒரு கப் ,கற்கண்டு – ஒரு கப், பால் – ஒரு கப், தண்ணீர் – 2 கப், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை ,உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – 3 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10 ,திராட்சை – 10, ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்,
செய்முறை-
முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் கற்கண்டையும் அடுப்பில் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கற்கண்டு போட்டு பாதி அளவு கரைந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். மீதம் இருக்கும் கற்கண்டு அந்த சூட்டிலேயே கரைந்து விடும். இப்பொழுது அடுப்பை குக்கரை வைத்து அதில் பால், ஊற வைத்திருக்கும் அரிசி, தண்ணீர், குங்குமப்பூ, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி மூன்று விசில் வரும் அளவிற்கு விட வேண்டும். மூன்று விசில் வந்த பிறகு, குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
குக்கரின் விசில் நன்றாக போனபிறகு அதைத் திறந்து கரண்டியை வைத்து நன்றாக அந்த சாதத்தை மசித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கரைத்து வைத்திருக்கும்,கற்கண்டு தண்ணீரையும் அதில் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும்.
ஒரு தாலிக்கும் கரண்டியை எடுத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நெய் உருகியதும் அதில் முந்திரிப் பருப்பு விருப்பம்
இருப்பவர்கள், உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து, அதை கற்கண்டு பொங்கலில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கற்கண்டு சாதம் தயாராகிவிட்டது.
0
Leave a Reply