4 வகை அலைகளை வெளிப்படுத்தும் மூளை.
மனித மூளையானது 4 வகையான அலைகளை வெளிப்படுத்துகிறது. மனித மூளை என்பது மின் தூண்டல் மூலம் இயக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைத்து வயது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்களுக்கு ஏற்படும் எண்ணங்களை பொறுத்து வெவ்வேறு மூளை அலைகள் உருவாகி, அதன் உணர்வுகளை பெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தீவிரமாக இயங்கும்போது பீட்டா அலைகளை மூளை உரு வாக்குகிறது. இந்த பீட்டா அலைகளின் அதிர்வெண் ஒரு வினாடிக்கு 15 முதல் 40 சுழற்சிகள் வரை இருக்கும். சற்று ஓய்வு நிலையில் மூளை ஆல்பா அலைகளை வெளியிடுகிறது. ஆல்பா அலைகளின் அதிர்வெண் வினாடிக்கு 9 முதல் 14 சுழற்சிகள் வரை இருக்கும். ஒரு பணியை முடித்துவிட்டு ஓய்வு நிலையில் இருக்கும்போது ஆல்பா அலைகளை வெளியிடும். தியானம் செய்யும் போது, மனம் மிகவும் ஓய்வான நிலையில் இருக்கும் போது ஆல்பா அலைகளை மூளை வெளியிடுகிறது.
மூளை வெளிப்படுத்தும் மற்றொரு அலை தீட்டா வகை அலைகள் ஆகும். இந்த வகை அலையின் அதிர்வெண் வரம்பு பொது வாக ஒரு வினாடிக்கு 5 முதல் 8 சுழற்சிகள் வரை இருக்கும். ஒருவர் பணி முடித்து ஓய்வு எடுக்கும்போதும், கனவு காண தொடங்கும்போதும் தீட்டா அலை நிலையில் இருப்பார். மூளை வெளிப்படுத்தும் மற்றொரு அலை நிலை டெல்டா ஆகும். இங்கு மூளை அலைகள் மிகப்பெரிய வீச்சு மற்றும் மெதுவான அதிர் வெண் கொண்டவை. வினாடிக்கு 1.5 முதல் 4 சுழற்சிகள் வரம்பில் இருக்கும். மூளை ஏறக்குறைய முற்றிலும் செயல் கடந்த நிலையில் அமைதியாக காணப்படும். ஞானிகள் இந்த அலை நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. பொதுவாக, இந்த 4 மூளை அலை நிலைகளும் மனித இனத்துக்கு பொதுவானவை.
0
Leave a Reply