25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆரோக்கியமான வாழ்வுக்கு துளசி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கியமான வாழ்வுக்கு துளசி

பாரம்பரிய வைத்திய முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றான துளசிஎனும் மூலிகை .2 கப் தண்ணீருடன்10 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பின் இந்த நீரில் சுவைக்கு தேன் சேர்த்து கசாயம் போல் பருகி வர சளி, காய்ச்சல், தொண்டை வலி பிரச்சனைகளை விரட்டலாம். ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த துளசி இலைகளை அழற்சி எதிர்ப்பு கொண்ட தேனுடன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிப்பில் இந்த துளசி இலைகளை அப்படியே மென்று சாறு விழுங்க, செரிமான செயல்பாடு மேம்படும்.

துளசி இலைகளை சேர்த்து தேநீர் வடிவில் எடுத்துக்கொள்ள, ஆற்றல் இழப்பை தடுப்பதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்ஒரு கிளாஸ் தண்ணீரில்5to6 துளசி இலைகளை சேர்த்து, ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். பின் இந்த நீரினை வெறும் வயிற்றில் பருக செரிமான சிக்கல் நீங்குவதோடு ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்கலாம். துளசி இலைகளுடன் புதினா இலைகளை சேர்த்து அரைத்து சாறு பிரித்து பின் சிறிதளவு எலுமிச்சை சாறு, கசப்பு நீங்கும் அளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் வடிவில் பருக குடல் இயக்கம் மேம்படும். 2-3 துளசி இலைகளை கிராம்பு ஒன்றுடன் சேர்த்து வாயில் மோட்டு மென்று சாற்றை மட்டும் விழுங்கிவிட, சளி - தொண்டை எரிச்சல் பிரச்சனையில் இருந்து சற்று நிவாரணம் காணலாம்செடியில் இருந்துfreshஆக பறித்த துளசி இலைகளையே பயன்படுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட/ குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட துளசி இலைகளை பயன்படுத்துவது கூடாது! .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News