25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


விதைகளை நடும் எறும்புண்ணி ரோபோ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விதைகளை நடும் எறும்புண்ணி ரோபோ

இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலை, பிரிட்டிஷ் சூழலியல் கூட்டமைப்புடன் இணைந்து, ஆண்டுதோறும் இயற்கை ரோபாட்டிக்ஸ் போட்டியை நடத்தி வருகிறது. இயற்கையாக உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட் டவற்றை முன்மாதிரியாகக் கொண்டு ரோபோக்களைவடிவமைப்பதை ஊக்குவிப்பதே இந்தப் போட்டி நடத்தப் படுவதன் நோக்கம். இதில்,முதல் பரிசு பெற்றுள்ளவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு மாணவர். அப்படி என்ன வடிவமைத்தார்?

தற்போது மரங்கள் வெட்டப்படுவதால், காடு களின் பரப்பளவு மிக வேக மாகக் குறைந்து வருகிறது. இதைச் சரிசெய்ய நிறையமரங்களை நடுவது அவசியம். மனிதர்கள் நேரடியாகச் சென்று, குழி தோண்டி மரங் களை நடுவது சுலபமல்ல. இதைச் செய்ய ஏன் ரோபோக் ளைப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தான்றியது.

தற்செயலாக பாங்கோலின்ஸ் (Pangolins) எனப்படும் ஒருவகை ஏறும்புண்ணிகளை மாணவர் கண்காணித்தார்.இவை தங்கள் முன்னங் கால்களால் மண்ணைத் தோண்டி அங்கே எறும்புகளைத் தேடி உண்கின்றன. இதைப் பார்த்த மாணவ ருக்கு இதைப்போலவே ஒரு ரோபோவை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.இதன் விளைவாக பாங்கோலின் வடிவ ரோபோவை உருவாக்கினார். இவற்றைத் தொலைவில் இருந்து இயக்க முடியும். இதில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 இவை நகர்வதற்கு உதவும். இதன் முன்னங்கால்கள் குழி தோண்டுவதற்கு உதவுகின்றன. இதன் உள்ளே இருக்கும் தாவரத்தின் விதை பின்பகுதியிலிருந்து சரியாகத் தோண்டப்பட்ட குழியில் விழும்.இவ்வாறு விதையை விடுவிக்கும்போது சமாளித்து நிற்பதற்கு இதன் பின்னங்கால் கள், வால் உதவும்.இயற்கையைக் காக்க, இயற்கையில் இருக்கும் விஷயத்தைத் தூண்டுகோலாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த ரோபோவுக்கு முதல் பரிசு தரப்பட்டுள்ளது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News