25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீரக்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீரக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (24.06.2025) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

          இம்முகாமில், திருநங்கைகள் நல வாரிய அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை  மற்றும் வாக்காளர் அட்டை, சொந்தமாக சுயத்தொழில் தொடங்குவதற்கான மானியம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 165 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து  உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

            இம்முகாமில், 20 நபர்களுக்கு திருநங்கை தேசிய அடையாள அட்டைகளையும், 1 நபருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினையும், 24 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 26 நபர்களுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அட்டை என மொத்தம் 71 திருநங்கைகளுக்கு  நலத்திட்ட உதவிகளை   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி திலகம், திருநங்கைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News