25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால்….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால்….

இந்தியாவில் காய்ச்சல், தலைவலிக்கு,பெரும்பாலானோர் பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள், இந்த மாத்திரைகள் உட்கொள்ள தகுதி இல்லாதவை என்று அறிவுறுத்தி வருகின்றன.

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் அடிக்கடி பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்துவதால் இரைப்பை, குடல், இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல் நல தகவல்கள் ஆய்வு செய்யபட்டன. பாராசிடமால் மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.

ஆய்வின் முடிவுகளுக்கு ஏற்ப, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நீண்ட காலமாக பாராசிடமால் பயன்படுத்தினால், நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயம் 7% அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News