25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய கோப்பை பைனலுக்கு ,பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' இந்தியா  அணி முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை பைனலுக்கு ,பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' இந்தியா  அணி முன்னேறியது.

 ஆசிய கோப்பை பைனலுக்கு ,பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' இந்தியா  அணி முன்னேறியது. அரை யிறுதியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை 'ஏ' அணியை வென்றது.

வளர்ந்து வரும் பெண் களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பைகிரிக்கெட் 2வது சீசன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்,. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் "நடப்பு சாம்பியன்' இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ' அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை 'ஏ' அணி  19.4 ஓவரில், 118 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 

இந்தியா 'ஏ' அணி 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராதா யாதவ், ஆட்ட நாயகி விருது வென்றார். 

வங்கதேச 'ஏ அணி (110/8), 54 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் 'ஏ' அணியை (56/10) மற்றொருஅரையிறுதியில் வென்றது. நாளை நடக்கவுள்ள பைனலில், இந்தியா 'ஏ', வங்கதேச 'ஏ' அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை (2023) இவ்விரு அணிகள்மோதிய பைனலில் இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பைவென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News