மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன், உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது.
ஆண்டுக்கு 365 நாட்களில் 294 நாட்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லை. இந்த திருவிழாக்களில் சித்திரை திருவிழாதான் பிரம்மோற்சவ விழாவாககொண்டாடப்படுகிறது. இது உலகப் புகழ் பெற்ற விழாவும் ஆகும்.
திருவிழா கொடியேற்றம் குறித்து, "சித்திரை திருவிழாவுக்ககாக ஏற்றப்படும் கொடிப்பட்டத்தில் ரிஷபம் தர்மத்தின் உருவாகவும், ஆத்மாவின் உருவாகவும் மதிக்கப்படுகிறது. ஆத்மாக்களையும், தர்மத்தையும் கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்லும் இறைவனின் கருணையை இந்த கொடி யேற்றம் விளக்குகிறது. அனைத்து உயிர்களுக்கும் இந்த விழாவில் அருள்புரிய காத்திருக்கிறேன் என்று இறைவன் கூறும் விதமாகவும் கொடியேற்றம் நடக்கிறது. எனவே சித்திரை திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள், சிவபெருமானை நாடிச் சென்று அவரது அருளை பெற வேண்டும்'' . என்று கொடியேற்றம் கூறும் தத்துவம்.
0
Leave a Reply