25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார்கோயில் என்பது  திருவண்ணாமலை  கிரிவலம் பாதையில் அமைந்துள்ளகோயிலாகும். இந்தக் கோவில்  குபேரன் கோயிலுக்கு  அருகில் அமைந்துள்ளது.இடுக்கு பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டாலும் விநாயகர் சிலைஇக்கோயிலில் இல்லை. தரைப்பகுதியில் கால் பாத சிற்பம் காணப்படுகிறது. இடுக்குபிள்ளையார் கோயிலில் நுழைந்து வரும் போது பக்தர்கள் இந்தப் பாதத்தை தொட்டுவணங்குகின்றனர்.கோயில் நேர்கோட்டில் அமையாத மூன்று வாசல்களை கொண்டது. பக்கவாட்டின்இருபுறமும் சுவர் உள்ளது. பின்பக்க வாசல் வழியாக நுழைந்து இரண்டாவது
வாசலை தவழ்ந்தபடி அடைந்து மூன்றாவது வாசல் வழியாக வெளியே வரவேண்டும். இரண்டாவது வாசல் வழியே வெளிவர ஒருக்களித்து படுத்து கைகளை
உந்தி சிரமப்பட்டு வெளிவர வேண்டியுள்ளது.இடுக்கு பிள்ளையார் கோயில் பரம்பரை கோயில் ஆகும். இந்தக்கோயிலைதிருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள ரங்கநாதன் என்பவர்பராமரிக்கிறார். இக்கோயிலுக்கு 1969 மார்ச் மாதம் 23 ஆம் நாள் முதன் முதலாகதிருப்பணி செய்துள்ளனர். அதன்‌ பின்பு 1976 முதல் 2004 வரை பல முறை திருப்பணிநடைபெற்றுள்ளதாக குறிப்புகள் கோயிலில் எழுதப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News