25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பனிக்கரடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பனிக்கரடி.

உறைபனி சூழந்த ஆர்டிக் பிரதேசத்தில் வாழ்கின்றன பனிக்கரடிகள்.உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய விலங்கு. கரடி இனத்தை சேர்ந்த பாலுாட்டி. இதன் ரோமம் வெள்ளையாக தெரிந்தாலும் கண்ணாடி போன்று நிறமில்லாதது. உண்மையில் இதன் தோல் நிறம் கறுப்பு. நிலத்தில் பிறந்தாலும், வாழ்நாளில் பெரும் பகுதியை கடலில் கழிக்கும். கடல் வாழ் உயிரினமான சீல் தான் இதன் பிரதான உணவு.இதற்கு, 42 பற்கள் உண்டு. தோலுக்கு அடியில், 10 செ.மீ., அடர்த்தியில் கொழுப்பு திரண்டு இருக்கும். அதனால் தான் குளிரிலும் இயல்பாக வாழ்கிறது.

ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள சீல்களையும் மோப்பத் திறனால் அறியும். மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. நீரில் மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் நீந்தும். திமிங்கலம் போன்ற உணவு கிடைக்கும் போது மட்டும் பகிர்ந்து உண்ணும்.உறை பனி காலமான ஏப்ரல், மே மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பிரசவ காலத்தில் பனிப்பரப்பில் பெண்கரடிவளை தோண்டிக் கொள்ளும். அதில், காற்று செல்லும் வசதியுடன் பல அறைகள் இருக்கும்.

அங்கு இரண்டு குட்டிகளை ஈன்று எடுக்கும். குட்டிகள் குறைந்தபட்ச ரோமத்துடன் கண்களை மூடியபடி பிறக்கும். ஆர்டிக் பிரதேசத்தில் இதை இரையாக்கும் விலங்கு எதுவும் கிடையாது. மனிதர்கள் வேட்டையாடுவதால் அருகி வருகிறது இந்த உயிரினம். புவி வெப்பம் அதிகரிப்பதால் வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News