25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வோர், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம் 04.03.2025-அன்று நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வோர், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம் 04.03.2025-அன்று நடைபெற உள்ளது

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வோர், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் உள்ளது. பிற திட்டங்களின் மூலமாக கல்வி உதவித்தொகை பெற்றாலும், கூடுதலாக இத்திட்டத்தின் மூலமாகவும் கல்வி உதவித்தொகை பெறலாம்.

இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமணம், மற்றும் பதிவு பெற்ற விவசாயிகளின் இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும்  காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ், டையாலிஸிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது.

 இத்திட்டத்திற்காக தகுதியான கூடுதல் பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி மாவட்டத்தின் அனைத்து வருவாய் வட்டங்களிலும் வரும் 04.03.2025 -ஆம் தேதி நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *