25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உலக பாரா தடகளத்தில் சிம்ரன், நிஷாத் ‘தங்கம்  வென்றனர்.பதக்கப் பட்டியலில் 4வது இடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாரா தடகளத்தில் சிம்ரன், நிஷாத் ‘தங்கம்  வென்றனர்.பதக்கப் பட்டியலில் 4வது இடம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில் ,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் (டி 12, பார்வைக் குறைபாடு) பைனல் நடந்தது. இந்தியாவின் சிம்ரன் சர்மா 11.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சிம்ரன்  வென்ற இரண்டாவது தங்கம் (2024, 2025) இது.

 இந்தியாவின் நிஷாத் குமார் (டி 47, வலது கை பாதிப்பு ) ஆண்களுக்கான  (2.14 மீ.,) உயரம் தாண்டுலில் தங்கம் வென்றார்.

 இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான (டி 35)  200 மீ., ஓட்டத்தில் (30.03 வினாடி),  இந்தியாவின் பர் தீப் குமார் (46.63 மீ.,), ஆண்க ளுக்கான வட்டு எறிதலில் (எப் 64) வெண்கலப் பதக்கம் வென்றனர். 

உலக பாரா தடகளத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றது. 

இதுவரை இந்தியா 6 தங்கம்,  5 வெள்ளி, 4  வெண்கலம் என 15 பதக்கம் வென்று, பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News