25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை பணி முடங்கியுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை பணி முடங்கியுள்ளது.

ராஜபாளையம் நடுவே செல்லும் ரயில்வே தண்ட வாளத்தை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலகு ரக. வாகனங்கள் நெரிசலில் மேம்பாலம் வழியே ஏறி செல்லாமல், சுரங்கப்பாதை மூலம் சுலபமாக கடக்க 800 மீ., நீளத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ரோடு டி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இணைக்க திட்ட அறிக்கைக்கு பொதுப் பணித்துறை, நகராட்சி சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்ட வாளம் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டு மின் வழித்தட கம்பிகள் மாற்றி பொருத்தியும், சுரங்கப் பாதைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் பணிகள் முடிந்தது.

இணைப்புக்காக டி.பி மில்ஸ் ரோட்டில் 6 மீட்டர் நிலம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பாதை திருமங்கலம், கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப்பாதையாக உள்ளது. எனவே ரயில்வே துறை 4 மீட்டர் நிலம் வழங்க முன்வந்தால் நகராட்சி சார்பில் 2 மீட்டர்இடம்ஒதுக்கமுடியும்எனதெரிவிக்கப்பட்டது. 

இணைப்பு ரோடு தாமதத்தால் சுரங்கப்பாதையை தற்காலிகமாக மண் போட்டு மூடி விட்டனர். செயல் பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறுவதாக தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல், எரிபொருள் விரயம், ஆபத்தாக கடந்து செல்வதால் விபத்து அபாயம் போன்ற சிக்கல்களை தினமும் சந்தித்து வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன் சிக்கலுக்கு வழிகாண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News